ஐபிஎல்: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் கம்பீர மாக வலம் வருகிறது.

ஐபிஎல்: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
Published on

சண்டிகர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் நியூ சண்டி காரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

இந்த சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் கம்பீர மாக வலம் வருகிறது. அந்த அணி, குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளை தோற்கடித்துள்ளது.

ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு, லக்னோ அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (2 முறை ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவுக்கு எதிராக) கண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com