ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு பின்னடைவு...காரணம் என்ன ?

பெர்குசன், விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.
ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு பின்னடைவு...காரணம் என்ன ?
Published on

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன், தொடரின் முதல் பாதி போட்டிகளில் (முதல் 7 போட்டிகள்) விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால் இந்த முடிவை பெர்குசன் எடுத்துள்ளார். பெர்குசனின் இந்த முடிவு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com