ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: @IPL / @ChennaiIPL / @PunjabKingsIPL
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடக்கிறது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேவேளையில் பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி, 1 முடிவில்லை என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இதையடுத்து இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.






