ஐபிஎல்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
Published on

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைடெ றும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு, லக்னோ அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம்) கண்டுள்ளது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அந்த அணி அடுத்த 2 ஆட்டங்களில் சறுக்கியது. ஆனால் கடந்த ஆட்டத்தில் தொடக்க வரிசை வேகமாக வீழ்ந்தாலும், ரவீந்திர ஜடேஜாவின் (43 ரன்) கணிசமான பங்களிப்பின் உதவியுடன் லக்னோவுக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான் எதிரணியை 119 ரன்னில் சுருட்டி வெற்றிப்பாதைக்கு திரும்பி யது.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி (254 ரன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (245), துருவ் ஜூரெல் பலம் சேர்க்கிறார்கள். ஆனால் இவர்கள் சீக்கிரம் அவுட் ஆனால் மிடில்வரிசை பேட்டர்கள் திணறுகிறார்கள். கேப்டன் ரியான் பராக், ஹெட்மயர், டோனவன் பெரேரா ஆகியோர் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய் (தலா 11 விக்கெட்), நன்ரே பர்கர் மிரட்டக்கூடியவர்கள். ரவீந்திர ஜடேஜா ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார்.

ஐதராபாத் அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (கொல்கத்தா, ராஜஸ் தான், சென்னை, டெல்லி அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப் அணிகளிடம்) பெற்றுள்ளது. ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (323 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (320), இஷான் கிஷன் (238), டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி என அதிரடி பட்டியல் நீளுகிறது. பந்து வீச்சில் இஷான் மலிங்கா (12 விக் கெட்), ஹர்ஷ் துபே, சகிப் ஹூசைன், பிரபுல் ஹிங்கே கைகொடுக்கின்றனர். முதுகுப்பகுதி காயத்தால் கடந்த 7 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் கம்மின்ஸ் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவதை உறுதி செய்து இருக்கிறார். அவரது வருகை அந்த அணியின் பந்து வீச்சை வலுப்படுத் தும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்ததில், 13-ல் ஐதராபாத்தும், 9-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com