

கவுகாத்தி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங் களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
முன்னாள் சாம் பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், கவுகாத்தியில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த மழை நின்றதால் போட்டி தொடங்கப்பட உள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.