ஐபிஎல் - ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்... முதல் தோல்வியை சந்தித்த பஞ்சாப்

இந்த சீசனில் பஞ்சாப் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் - ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்... முதல் தோல்வியை சந்தித்த பஞ்சாப்
Published on

சண்டிகர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நியூசண்டி காரில் இன்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸை வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது. பிரியன்ஷி ஆர்யா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட பிரப்சிம்ரன் சிங் அரைசதமடித்து அசத்தினார். ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் கள்மிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி வழக்கம்போல அதிரடிகாட்டினார். ராஜஸ்தான் பந்துவீச்சை பவுண்டரிக்கு பறக்கவிட்ட அவர் 43(16) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Also Read
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி
ஐபிஎல் - ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்... முதல் தோல்வியை சந்தித்த பஞ்சாப்

தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் துருவ் ஜுரெல் ஜோடி சேர்ந்தார். இதில் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட ஜுரெல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் 54(38) ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஜுரெல் 16(20) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் கேப்டன் ரியான் பராக் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து 51(27) அவுட்டானார். தொடர்ந்து டோனோவன் பெரெய்ரா களமிறங்கினார். அப்போது கேப்டன் ரியான் பராக் 29(16) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இம்பேக்ட் பிளேயராக சுபம் துபே களமிறங்கினார்.

இந்த பெரெய்ரா - சுபம் துபே ஜோடி அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் இலக்கை நோக்கி வேகமாக சென்றது. இறுதியில் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் பஞ்சாப் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. பெரெய்ரா 52(26) ரன்களுடனும், சுபம் துபே 31(12) ரன்களுடனும் கடைசிவரை ஆடமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com