ஐ.பி.எல்.: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: @IPL
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
டெல்லி,
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 31 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் 32வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி 4 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், 6 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் தோல்வியிலிருந்து வருவதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.






