ஐபிஎல்: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
ஐபிஎல்: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
Published on

பெங்களூரு,

ஐபிஎல் 2026 தொடரின் 34-வது லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் நல்ல நிலையில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தங்களது கடைசிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஆர்சிபி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பத் துடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறும்.

மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனைத் தோல்வியுடன் தொடங்கினாலும், பின்னர் தொடர்ந்து 3 வெற்றிகளைக் குவித்து அசத்தியது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தங்களது கடந்த கடைசி போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வர குஜராத் அணி இன்று கடுமையாகப் போராடும்.

பேட்டிங்கிற்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் இன்று ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இங்கு நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 193 ஆகும். அதில் 3 போட்டிகளில் இரண்டாவதாகப் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com