

லக்னோ,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது;
”எங்களுக்கு இது நல்ல ஆட்டமாக அமைந்தது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு் மிகவும் முக்கியமானது. நாங்கள் பல விஷயங்களை முயற்சி செய்து வருகிறோம். எங்களுக்கு இது ஒரு கடினமான சீசனாக இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் முயற்சி செய்தோம். இன்று வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு அணியாக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த சீசனில் எங்கள் பலம் பந்துவீச்சுதான். அனைத்து பந்துவீச்சாளர்களும், குறிப்பாக பிரின்ஸ், ஷமி, ரதி, ஆவேஷ், மயங்க் என அனைவரும் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தினர்.”
இவ்வாறு அவர் கூறினார்.