ஐபிஎல்: கொல்கத்தா அணியில் ரசல் ஜெர்சி நம்பருக்கு ஓய்வு

10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐபிஎல்: கொல்கத்தா அணியில் ரசல் ஜெர்சி நம்பருக்கு ஓய்வு
Published on

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரசல் கடந்த 2014 முதல் 2025-ம் ஆண்டு வரை விளையாடினார். அவர் அந்த அணிக்காக 2,593 ரன்னும், 122 விக்கெட்டும் எடுத் துள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் எல்லா வகையிலான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற ரசல் தற்போது கொல்கத்தா அணியின் அதிரடி பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்த நிலையில் ஆந்த்ரே ரசலின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவர் இதுவரை அணிந்து ஆடிய 12-ம் நம்பர் சீருடைக்கு ஓய்வு அளிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி அந்த அணி வீரர்கள் யாரும் 12-ம் நம்பர் ஜெர்சியை அணிய முடியாது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com