ஐ.பி.எல்.: சென்னை, மும்பை அணிகள் குறித்து மனம் திறந்த சாண்ட்னர்


ஐ.பி.எல்.: சென்னை, மும்பை அணிகள் குறித்து மனம் திறந்த சாண்ட்னர்
x
தினத்தந்தி 20 April 2025 4:47 PM IST (Updated: 20 April 2025 4:47 PM IST)
t-max-icont-min-icon

மும்பை - சென்னை ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது.

மறுபுறம் சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இதனால் வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகள் குறித்து, சிஎஸ்கே முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய வீரருமானா சாண்ட்னர் மனம் திறந்து சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மும்பைக்கும் சென்னைக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் மிகவும் வெற்றிகரமான அணிகள். அவர்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது: அவர்கள் அனைத்து வீரர்களுக்கும் நியாயமான வாய்ப்பை வழங்குகிறார்கள். இந்த ஆண்டு, இரு அணிகளும் ஒரு சில நெருக்கமான போட்டிகளில் தோல்வியடைந்தன.

ஒருவேளை அவர்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியிருக்கவில்லை. ஆனால் ஐ.பி.எல். மிகவும் கடினமான தொடர். பல போட்டிகளில் கடைசி ஓவர்களில் முடிவுகளை பார்த்திருக்கிறோம். இப்போது மும்பை அணியுடன் இருப்பது சற்று வித்தியாசமானது. நான் இங்கு அதிக வாய்ப்பு பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

1 More update

Next Story