

ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தொடக்க போட்டிகளில் விளையாட மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடர் என்பது மிகப்பெரிய ஒன்று என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நான் முதன்முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற போது, வெறும் ஒரு மாதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் 2 மில்லியனிலிருந்து 3.5 மில்லியனாக உயர்ந்தது. ஐபிஎல் என்பது மிகப்பெரிய ஒன்று, ஒட்டுமொத்த ஐதராபாத் நகரமும் எங்களுக்குப் பின்னால் நிற்கிறது என கூறினார்.