ஐ.பி.எல்.: ஜாம்பவான்கள் வார்னே, காலிஸ் ஆகியோரின் மாபெரும் சாதனையை சமன் செய்த சுனில் நரைன்

சுனில் நரைன் நடப்பு ஐ.பி.எல். சீசனில் இதுவரை 461 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
image courtesy: PTI 
image courtesy: PTI 
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாவ்லா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு சீசனில் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. மேலும் நடப்பு சீசனில் பேட்டிங்கில் அசத்தி வரும் அவர் இதுவரை 461 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் 400+ ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் என்ற ஷான் வார்னே, காலிஸ் ஆகியோரின் மாபெரும் சாதனையை சுனில் நரைன் சமன் செய்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

ஷேன் வார்னே - 472 ரன்கள் - 17 விக்கெட்டுகள்

காலிஸ் - 409 ரன்கள் - 15 விக்கெட்டுகள்

சுனில் நரைன் - 461 ரன்கள் - 15 விக்கெட்டுகள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com