ஐ.பி.எல்.: மும்பை அணியின் முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் ஆடமாட்டார்

சூர்யகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்கிவிட்டது என்பதற்கான எமோஜியை பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல்.: மும்பை அணியின் முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் ஆடமாட்டார்
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட்டின் 'நம்பர் ஒன்' அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், குடலிறக்க பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்த பிறகு கடந்த 3 மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

உடல்தகுதியை மீட்டெடுக்க பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனாலும் இன்னும் முழு அளவில் குணமடையவில்லை. அவருக்கு முழு உடல்தகுதியை எட்டி விட்டதற்கான சான்றிதழை கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ கமிட்டி தற்போது வரை வழங்கவில்லை. மறுபடியும் அவருக்கு நாளை உடல்தகுதி சோதனை நடத்தப்படுகிறது.

இதனால் அவர் ஐ.பி.எல்.-ல் மும்பை அணிக்குரிய முதல் ஆட்டத்தில் (குஜராத்துக்கு எதிராக) விளையாடமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் சூர்யகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்கிவிட்டது என்பதற்கான எமோஜியை பதிவிட்டுள்ளார்.

நாளைய உடல்தகுதி சோதனையிலும் அவர் தோல்வி அடைந்தால் அது மும்பை அணிக்கு பெருத்த பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com