’தோனிக்கும் மற்ற கேப்டன்களுக்கும் உள்ள வித்தியாசம்’ - மனம் திறந்த சிஎஸ்கே முன்னாள் வீரர்

தோனியை மற்ற அணியின் கேப்டன்களிலிருந்து வேறுபடுத்தும் முக்கியமான குணத்தை வெளிப்படுத்தினார்.
’தோனிக்கும் மற்ற கேப்டன்களுக்கும் உள்ள வித்தியாசம்’ - மனம் திறந்த சிஎஸ்கே முன்னாள் வீரர்
Published on

சென்னை:

சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயின் அலி, தோனியை மற்ற அணிகளின் கேப்டன்களிலிருந்து வேறுபடுத்தும் முக்கியமான குணத்தை வெளிப்படுத்தினார்.

2021 முதல் 2024 வரை சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த மொயின் அலி, ஒரு அல்லது இரண்டு மோசமான ஆட்டங்களுக்காக வீரர்களை அணியின் இருந்து நீக்காமல், அவர்களின் திறனை நம்பி தொடர்ந்து வாய்ப்பளிப்பதே தோனியின் மிகப்பெரிய பலம் என அவர் கூறினார்.

Also Read
பிஎஸ்எல் - உஸ்மான் தாரிக் வீசிய பந்து... மீண்டும் மீண்டும் விலகி சென்ற மிட்செல் - பாராட்டிய இந்திய முன்னாள் வீரர்
’தோனிக்கும் மற்ற கேப்டன்களுக்கும் உள்ள வித்தியாசம்’ - மனம் திறந்த சிஎஸ்கே முன்னாள் வீரர்

அவர் பேசுகையில், “பல அணிகளில், ஆரம்ப போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் வீரர்கள் நீக்கப்படுவார்கள். ஆனால் தோனி அப்படிச் செய்யமாட்டார். அவர் வீரர்களின் திறனை பார்த்து அவர்களை நம்புகிறார். இதுதான் தோனியை மற்ற அணியின் கேப்டன்களிலிருந்து வேறுபடுத்துகிறது’ என்றார்.

மேலும், அணியில் இருந்த இளம் பந்துவீச்சாளர்களான பதிராணா மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் சிறப்பாக விளையாடியதற்கு தோனி அளித்த ஆதரவு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com