ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை கேப்டன் கூறியது என்ன?

டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை வெற்றி பெற்றது.
ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை கேப்டன் கூறியது என்ன?
Published on

சென்னை,

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், டெல்லிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் கூறுகையில், வெற்றி கணக்கை தொடங்கியது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து 200க்கும் அதிகமான ரன்களை இலக்காக நிர்ணயித்தோம். சஞ்சு சாம்சனும், ஆயுஷ் மாத்ரேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு திட்டங்களை செயல்படுத்தினர்.

எங்களிடம் முக்கிய பந்து வீச்சாளர் என்று யாரும் இல்லை. ஆனால் ஆட்டத்தில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த ஆட்டங்களிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், கடைசி ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் 20 அல்லது 25 ரன்கள் கொடுத்தோம். அதுதான் அந்த போட்டிகளில் தோல்விக்கான காரணமாக அமைந்தது. ஆனால் பந்து வீச்சை பொறுத்தவரை இன்று சரியான திசையில் செயல்படுத்தினோம். எந்த சூழ்நிலையிலும் ரசிகர்கள் எங்களுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர். ரசிகர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com