ஐ.பி.எல்.: மழை காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்...?


ஐ.பி.எல்.: மழை காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்...?
x

Image Courtesy: @IPL

தினத்தந்தி 2 Jun 2025 11:30 PM IST (Updated: 2 Jun 2025 11:30 PM IST)
t-max-icont-min-icon

இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நாளை மோத உள்ளன.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பதை இங்கு காணலாம். அதன்படி நாளைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் போட்டி ரிசர்வ் நாளுக்கு (ஜுன் 4ம் தேதி) நகரும்.

ஒரு வேளை ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் சிறந்த தரவரிசையை பெற்ற அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story