ஐ.பி.எல்; சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? - இங்கிலாந்து முன்னாள் வீரர் கணிப்பு

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.

இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்கள் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது கணிப்பை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இறுதிப்போட்டியில் டாஸ் 50 - 50 வெற்றியை தீர்மானிக்கும். நீங்கள் பனி வருகிறதா இல்லையா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெற்றி என்பது நீங்கள் எந்தளவுக்கு நல்ல மனநிலை மற்றும் தன்னம்பிக்கையுடன் பைனலுக்கு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அங்கே தான் கொல்கத்தாவுக்கு சாதகம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இதுவரை அவர்கள் விளையாடிய விதமும் முதல் தகுதி சுற்று போட்டியில் வென்ற விதமும் நன்றாக உள்ளது. அவர்களுக்கு கடந்த 3 - 4 நாட்கள் இறுதிப்போட்டிக்கு தயாராக போதுமான நேரம் கிடைத்திருக்கும். மறுபுறம் அகமதாபாத் நகரில் நடந்த முதல் தகுதி சுற்று போட்டியில் ஐதராபாத் விளையாடிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை.

அது இன்று அவர்களை பின்னங்காலில் நிற்க வைக்கும். குறிப்பாக டிராவிஸ் ஹெட் கையில் கம்மின்ஸ் பந்தை கொடுத்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து நொறுக்கினார். அது சில தினங்களுக்கு முன்பாக ஐதராபாத்தை வீழ்த்தினோம் என்ற தன்னம்பிக்கையை கொல்கத்தாவுக்கு கொடுத்திருக்கும். எனவே ஐதராபாத் அணி அங்கிருந்து எழுந்திருப்பது மிகவும் கடினமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com