ஐ.பி.எல்.: டாப்-2 இடத்தை பிடிக்குமா பெங்களூரு..? லக்னோவுடன் இன்று மோதல்


ஐ.பி.எல்.: டாப்-2 இடத்தை பிடிக்குமா பெங்களூரு..? லக்னோவுடன் இன்று மோதல்
x

image courtesy:PTI

நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளன.

அதன்படி லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்துவிடும். அது பிளே ஆப் சுற்றில் அந்த அணிக்கு கூடுதல் நன்மையாக அமையும். எனவே அதற்கான பெங்களூரு அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

மறுபுறம் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி பஞ்சாப் கிங்ஸ் முதல் அணியாக டாப்-2 இடத்தை உறுதி செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றால் 2-வது அணியாக டாப்-2 இடத்தை உறுதி செய்யும். தோல்வியடைந்தால் குஜராத் டைட்டன்ஸ் 2-வது இடத்தை உறுதி செய்யும். பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் முறையே 3 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கும்.

1 More update

Next Story