ஐபிஎல் - சென்னை மண்ணில் தொடரும் மும்பையின் ஆதிக்கம்... பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே? - இன்று மோதல்

சென்னை அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் தடுமாறி வருகிறது.
ஐபிஎல் - சென்னை மண்ணில் தொடரும் மும்பையின் ஆதிக்கம்... பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே? - இன்று மோதல்
Published on

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்படும் எம்.எஸ். தோனி இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

மும்பை அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் அந்த அணியின் பிளே-ஆப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வரும். காயத்தால் கடந்த 4 போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து டாஸின் போதுதான் தெரியவரும்.

Also Read
"விமர்சனங்களுக்கு பதிலளிக்க தேவையில்லை... - ரியான் பராக்
ஐபிஎல் - சென்னை மண்ணில் தொடரும் மும்பையின் ஆதிக்கம்... பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே? - இன்று மோதல்

இவ்விரு அணிகளும் இதுவரை 40 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 21-ல் மும்பையும், 19-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை மோதியதில் அதிலும் மும்பையின் கையே சற்று ஓங்கி (5-4) நிற்கிறது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த சீசனில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியபோது, சென்னை அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதற்கு இன்று மும்பை பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com