ஐபிஎல்: லக்னோவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா

இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா - லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.
ஐபிஎல்: லக்னோவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
Published on

கொல்கத்தா,

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா - லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. பின் ஆலன் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிற்கிய ரகுவன்ஷி, ரஹானேவுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. ரஹானே 41 ரன்களும், ரகுவன்ஷி 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிங்கு சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரோவ்மேன் பவல் மற்றும் கிரீனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கிரீன் 32 ரன்களும், பவல் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றனர். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com