ரோகித், ரிக்கெல்டன் அதிரடி... லக்னோவை வீழ்த்திய மும்பை

லக்னோ தரப்பில் சித்தார்த் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ரோகித், ரிக்கெல்டன் அதிரடி... லக்னோவை வீழ்த்திய மும்பை
Published on

மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் மிட்சேல் மார்ஷ் 44 ரன்கள் எடுத்தார். ஜோஸ் இங்கிலிஷ் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சன் செய்தார். அவர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 8 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இறுதியில் மார்க்ரம் 31 ரன்களும், ஹிம்மத் சிங் 40 ரன்களும் எடுக்க, லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் ரிக்கெல்டன் களமிறங்கினர். லக்னோ பந்துவீச்சை சிதறடித்த இருவரும் வேகமாக அரைசதம் கடந்தனர். அப்போது ரிக்கெல்டன் 83(32) ரன்கள் அடித்து அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த ரோகித்தும் 84(44) ரன்களில் அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 11(13) ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12(7) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து நமந்தீர்- வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி மும்பை வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் சித்தார்த் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மும்பையில் நமந்தீர் 23(12)ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 10(4) ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com