11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், சென்னை அணி பந்துவீச்சு

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார். #IPL2018
11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், சென்னை அணி பந்துவீச்சு
Published on

மும்பை,

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சரியாக இரவு 6.15 மணிக்கு ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தொடங்கி வைத்தார். பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார். 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பரம எதிரியான மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com