இரானி கோப்பை கிரிக்கெட்: 3ம் நாள் முடிவில் விதர்பா 224 ரன்கள் முன்னிலை


இரானி கோப்பை கிரிக்கெட்: 3ம் நாள் முடிவில் விதர்பா 224 ரன்கள் முன்னிலை
x

Image Courtesy: @BCCIdomestic

ரஞ்சி சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

நாக்பூர்,

ரஞ்சி சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்தது. விதர்பா தரப்பில் அதர்வா டெய்ட் சதம் (143 ரன்) விளாசினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா நேற்றைய 2-வது நாள் முடிவில் 53 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. அபிமன்யு ஈஸ்வரன் 52 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். கேப்டன் ரஜத் படிதார் 42 ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 69.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 214 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 66 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் யாஷ் தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 128 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

விதர்பாவின் தொடக்க வீரரகளாக அதர்வா டெய்ட் மற்றும் அமன் மொகதே களம் புகுந்தனர். இதில் அதர்வா டெய்ட் 15 ரன்னிலும், அமன் மொகதே 37 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து துருவ் ஷோரே மற்றும் டேனிஷ் மலேவர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இன்றைய 3ம் நாள் முடிவில் விதர்பா அணி தனது 2வது இன்னிங்சில் 36 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது.

இதுவரை விதர்பா அணி 224 ரன்கள் முன்னிலையில் உள்ளது. விதர்பா தரப்பில் துருவ் ஷோரே 24 ரன்னுடனும், டேனிஷ் மலேவர் 16 ரன்னுடம் களத்தில் உள்ளனர். நாளை 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

1 More update

Next Story