டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே - அயர்லாந்து ஆட்டம் மழையால் தாமதம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே - அயர்லாந்து ஆட்டம் மழையால் தாமதம்
Published on

கொழும்பு,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், இலங்கையின் பல்லகெலே மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து மோத உள்ளன.

அதேவேளை, பல்லகெலேவில் மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்டத்திற்கான டாஸ் இன்னும் சுண்டப்படவில்லை.

மழை தொடர்ந்து பெய்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். அதேவேளை, ஆஸ்திரேலிய அணி டி20 உலகக்கோப்பை தொடர்ந்து இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com