நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார்..? வெளியான தகவல்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து சி.எஸ்.கே. வீரர் தீபக் சஹார் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கடந்த 1-ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.

முன்னதாக இப்போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் முதல் ஓவரில் இரண்டு பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் தீபக் சஹாரின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com