தோனி ஓய்வு பெறுகிறாரா? சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பதில்

தோனி தற்போது வரை ஓய்வு அறிவிக்காததால், அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
image courtesy:Chennai Super Kings/ @ChennaiIPL
image courtesy:Chennai Super Kings/ @ChennaiIPL
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 44 வயதான தோனி காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தோனியின் பேட்டிங்கை பார்க்க விரும்பிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை இது அளித்தது.

தோனி தற்போது வரை ஓய்வு அறிவிக்காததால், அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் வர்ணணையாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கெய்க்வாட் கூறியதாவது: தோனி விளையாடுவாரா என்பது அடுத்த ஆண்டில்தான் தெரிய வரும். எனக்குக் கூட அடுத்த ஆண்டில்தான் தெரியும். நிச்சயமாக இந்த சீசனில் அவரை மிகவும் மிஸ் செய்தோம்.

குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் களத்தில் வந்தால் எதிரணி அணிக்கு ஒரு பயம் இருக்கும். அவர் க்ரீஸில் இருப்பதாலேயே போட்டியின் நிலையும், வேகமும் மாறிவிடும். இந்த சீசனில் அவரை நாங்கள் அதிகமாக இழந்தோம். அடுத்த சீசன் பற்றி எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இந்த ஆண்டு எங்களிடம் இருந்த வீரர்களாலும், அவர்கள் பெற்ற அனுபவத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com