கடைசி போட்டியில் காயமடைந்த ஹர்ஷல் - பிளே ஆப் சுற்றில் விளையாடுவாரா ? - வெளியான தகவல்

குஜராத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் பாதியிலே வெளியேறினார்.
Image Courtesy : IPL / Twitter 
Image Courtesy : IPL / Twitter 
Published on

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி நேற்று தகுதி பெற்றது. டெல்லி அணியை மும்பை வீழ்த்தியதன் மூலம் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பெங்களூரு அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் கடந்த 19 ஆம் தேதி குஜராத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஒரு ஓவர் வீசிய நிலையில் கேட்ச் பிடிக்கும் போது குஜராத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் பாதியிலே வெளியேறினார். அதன் பிறகு அவர் பந்துவீச வரவில்லை.

இந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் 25 ஆம் தேதி லக்னோ அணியை எதிர்கொள்ளும் பெங்களூரு அணியில் ஹர்ஷல் பட்டேல் விளையாடுவாரா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவியது.

இந்த கேள்விக்கு தற்போது ஹர்ஷல் பட்டேல் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " நான் அந்த பந்தை ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் பிடித்தபோது, வலது கையில் காயம் ஏற்பட்டது. எனக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. அவை மூன்று முதல் நான்கு நாட்களில் குணமடைந்துவிடும். பிளே ஆப் போட்டிக்கு நான் தயாராக இருப்பேன் என்று நினைக்கிறேன்," என தெரிவித்தார்.

இதனால் அவர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com