’3வது இடத்தில் இஷான் கிஷன்’...இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று இந்தூரில் தொடங்குகிறது.
சென்னை,
நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் டி20 தொடரில் 3வது இடத்தில் இஷான் கிஷன் களம் இறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
காயத்தால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இருந்து திலக் விலகியதால் இஷான் கிஷனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று இந்தூரில் தொடங்கும் நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார், ''ஒரு தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. அதில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இஷான் கிஷன், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3-வது வீரராக களமிறக்கப்படுவார். 3-வது இடத்தில் களமிறங்கி விளையாட அவருக்கு வாய்ப்பளிப்பது எங்களுடைய பொறுப்பு.
கிஷன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக களமிறக்கப்படவுள்ளார். திலக் வர்மாவுக்குப் பதிலாக அந்த இடத்தில் இஷான் கிஷன் சிறந்த தெரிவாக உள்ளார்’ என்றார்.






