இஷான் கிஷன் அதிரடி... ராஜஸ்தானுக்கு 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்தார்.
இஷான் கிஷன் அதிரடி... ராஜஸ்தானுக்கு 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்
Published on

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கு அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஐதராபாத் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில், அபிஷேக் ஷர்மா முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

Also Read
காயம்... அடுத்த போட்டியில் விளையாடுவாரா ரோகித் சர்மா ?
இஷான் கிஷன் அதிரடி... ராஜஸ்தானுக்கு 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

தொடர்ந்து, ஹெட்டுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இதில் இஷான் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் 18 ரன்களில் அவுட்டானார். பின்னர் கிளாசன் ஜோடி சேர அதிரடியாக ஆடிய இஷான் அரைசதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த இஷான் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்படநிலையில், 91 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கியநிலையில், கிளாசன் 40 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய நிதிஷ் குமார் 28 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்க உள்ளது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com