

மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி யின் தலைமை பயிற்சியாளராக இருந்த இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே பரஸ்பர சம்மதத்துடன் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான மும்பை இந்தி யன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சிளாராக வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் அணியின் முன்னாள் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்டகாலம் ஆடியவரும், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தவருமான கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நேற்று அறிவித்தது.
39 வயது ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் ஐ.பி.எல். தொடரில் 2010 முதல் 2022-ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். அந்த அணி 5 முறை கோப்பையை வென்ற போதும் முக்கிய பங்களித்தார். மும்பை இந்தி யன்ஸ் அணிக்காக மட்டுமே ஆடிய அவர் 2023-ம் ஆண்டு முதல் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார். தற்போது தலைமை பயிற்சியாளராக உயர்ந்து இருக்கிறார். பொல்லார்ட் ஐ.பி.எல்.லில் 189 ஆட்டங் களில் ஆடி 16 அரைசதங்களுடன் 3,412 ரன்கள் எடுத்து இருக்கிறார். அத்துடன் 69 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் 2020-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்லவில்லை. கடந்த சீசனில் 9-வது இடமே பெற்றது. கடந்த 16 ஆண்டுகளாக மும்பை அணியின் ஒரு அங்கமாக திகழும் பொல்லார்ட் வழிகாட்டுதலில் மும்பை அணி சரி வில் இருந்து மீண்டு வருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் 2020-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்லவில்லை. கடந்த சீசனில் 9-வது இடமே பெற்றது. கடந்த 16 ஆண்டுகளாக மும்பை அணியின் ஒரு அங்கமாக திகழும் பொல்லார்ட் வழிகாட்டுதலில் மும்பை அணி சரி வில் இருந்து மீண்டு வருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பொல்லார்ட் கருத்து தெரிவிக்கையில், 'மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பது எனக்கு கிடைத்த பெருமை. மும்பை இந்தியன்ஸ் எனது வாழ்க்கையில் முக் கிய அங்கமாக விளங்குகிறது. மும்பை, அணி, அதன் வீரர்கள் மற்றும் ரசிகர்களுடான எனது பந்தம் சிறப்பான ஒன்றா கும். மும்பை இந்தியன்ஸ் அணியின் நோக்கத்தையும், பொறுப்பையும் நன்கு அறிவேன். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினருடன் இணைந்து பணியாற்றி அணியின் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தவும், எங்களது திறமையை மேம் படுத்துதவற்கும். ரசிகர்களுக்கு கொண்டாட்டத்துக்கான பல தருணங்களை உருவாக்குவதற்கும் ஆவலாக இருக்கிறேன்' என்றார்.