

கொழும்பு,
சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டபோது சில விமர்சனங்கள் எழுந்தது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் தெண்டுல்கர், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்ரீலங்காவுக்கு எதிராக கொழும்பிலுள்ள நொன்சேஸ்ஸ்கிரிப்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தனது பங்கிற்கு ஒரு விக்கெட் எடுத்தார். டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் அஞ்சு ரவாத் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கரை முதல் ஓவரை வீசச் சொன்னார். அர்ஜுன் தனது கேப்டனை ஏமாற்றவில்லை,அவர் தனது இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் அர்ஜூன், கமில் மிஸ்ராவின் விக்கெட்டை எடுத்தார். மிஸ்ரா பிரமாதமான பேட்ஸ்மேன் ஆவார். தனது 15 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட தொடங்கி உள்ளார். மிஸ்ரா 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இருந்தார்.
இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. தெண்டுல்கர் ரசிகர்கள், அர்ஜுன் எதிர்காலத்தில் இந்தியாவை பெருமைப்படுத்துவார் என நம்புகிறார்கள்.