

* ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மற்றும் சீன வீரர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சினை இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண்சிங் நேற்று அளித்த பேட்டியில், ஆசிய மல்யுத்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சீனா வீரர்கள் பங்கேற்பது குறித்து மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினேன். சீனா, பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டினரும் இந்த போட்டியில் பங்கேற்க எந்தவித பிரச்சினையும் இல்லை. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அந்த நாட்டு வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.