அது எழுதப்பட்டிருந்தது....அதனால்தான்: சிராஜ் நெகிழ்ச்சி

3வது ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின
அது எழுதப்பட்டிருந்தது....அதனால்தான்: சிராஜ் நெகிழ்ச்சி
Published on

மும்பை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முதலில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.ஏற்கனவே இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார். இதனால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார்.

போட்டிக்கு பிறகு பேசிய சிராஜ், "சூர்யா எனக்கு கால் செய்து உடனே அணியில் சேருங்கள் என்றார்.. விளையாடாதீர்கள் என்றேன். அவர் கிண்டல் செய்கிறார் என நினைத்தேன். இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது என் கனவு. அது எழுதப்பட்டிருந்தது. அதனால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com