"டோனியை வெல்வது அவ்வளவு எளிதல்ல" - சஞ்சு சாம்சன் பேட்டி!

டோனி மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்று சஞ்சு சாம்சன் கூறினார்.
"டோனியை வெல்வது அவ்வளவு எளிதல்ல" - சஞ்சு சாம்சன் பேட்டி!
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னி அணி 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

"சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் நான் வென்றதே இல்லை. ஆனால் இன்று வெற்றி பெறவே விரும்பினேன். சென்னையுடனான போட்டியில் கடைசி 2 ஓவர்கள் மிகவும் பதற்றமாக இருந்தது.

டோனி களத்தில் இருப்பது எதிரணிக்கு ஆபத்தான விஷயம். டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான திட்டங்கள் எதுவும் பெரும்பாலும் பயனளிக்காது. அவரை வெல்வது எளிதல்ல. டோனிக்கு எதிராக எதுவும் வேலைக்கு ஆகாது. டோனியின் செயல்களுக்காக நீங்கள் அவரை போற்ற வேண்டும். டோனி மீது மிகுந்த மரியாதை இருக்கிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com