அபிஷேக் சர்மாவை பற்றி அதிகமாக யோசிப்பது அர்த்தமற்றது: இந்திய பயிற்சியாளர் கருத்து

அபிஷேக் சர்மா சரியான பார்மில் இல்லாதது அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அபிஷேக் சர்மாவை பற்றி அதிகமாக யோசிப்பது அர்த்தமற்றது: இந்திய பயிற்சியாளர் கருத்து
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நாளை ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சரியான பார்மில் இல்லாதது அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஃபார்ம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,

"ஒரே ஒரு போட்டியில் தான் தோற்றோம், அது அவர்களுக்கு நல்ல ஆட்டமாக இருந்தது, நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. கடந்த போட்டியில் அபிஷேக் நன்றாக இருந்தார்; ஒரு நபரைப் பற்றி அதிகமாக யோசிப்பது அர்த்தமற்றது. அது அவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர் மீண்டும் பந்தை அடிக்கத் தொடங்கியதும், நீங்கள் மீண்டும் அதே அபிஷேக்கை பார்ப்பீர்கள். எந்த சந்தேகமும் இல்லை. இப்போது, இந்த ஆட்டத்தில், அடுத்த போட்டியில் அவர் அதை செய்வார் என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பதில் இருந்து வெகு தொலைவில் என்று நான் நினைக்கிறேன்," என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com