15 வயது சிறுவனைப் பார்த்து நான் இவ்வளவு பயந்ததில்லை - கைல் ஜேமிசன்

சூர்யவன்ஷிக்கு எதிராக பந்து வீச பயந்ததாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் கூறியுள்ளார்.
15 வயது சிறுவனைப் பார்த்து நான் இவ்வளவு பயந்ததில்லை - கைல் ஜேமிசன்
Published on

ஜெய்ப்பூர்,

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பேட்டிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சூர்யவன்ஷிக்கு எதிராக பந்து வீச தான் பயந்ததாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக கைல் ஜேமிசன் கூறி இருப்பதாவது;

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறுவனைப் பார்த்து நான் இந்த அளவிற்குப் பயந்ததே இல்லை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதம் மற்றும் அவரது டைமிங் ஒரு முதிர்ச்சியடைந்த சர்வதேச வீரரைப் போலவே இருக்கிறது. 15 வயதில் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல. அவர் பந்தை அடிக்கும் வேகம் என்னை உண்மையில் மிரளச் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com