வங்கதேச கிரிக்கெட் அணிக்கு திரும்ப விரும்பும் ஜஹனாரா ஆலம்

கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு திரும்ப விரும்பும் ஜஹனாரா ஆலம்
Published on: 

டாக்கா,

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜஹனாரா ஆலம், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக மீண்டும் வங்கதேச அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். மனச் சோர்வு காரணமாக 2024 டிசம்பர் மாதம் முதல் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்கேற்கத் தயாராக உள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மகளிர் பிரிவுத் தலைவர் ரபிகுல் இஸ்லாம் பாபு உறுதிப்படுத்தியுள்ளார்.

தேசிய அணிக்காக விளையாடியபடியே தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்புவதாக ஜஹனாரா தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் நிர்வாகம் மற்றும் அணி சூழல் தொடர்பாக முன்பு சில சர்ச்சைகளும் புகார்களும் எழுந்திருந்த நிலையில், கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com