ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்வு... அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்வு... அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை. 

இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பித்தாக கூறப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த கிரெக் பார்கிளேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ஐ.சி.சி. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இளம் வயதில் ஐ.சி.சி.-ன் தலைவரானவர் என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com