ஜெய்ஸ்வால், அபிஷேக் இல்லை.. இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரம் யார்..? ரவி சாஸ்திரி பதில்

image courtesy:PTI
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரியிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தங்களது கெரியரின் கடைசி கட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.
இதனால் இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரர்கள் யார்-யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமும் நடைபெற்று வருகின்றன. அதற்கு பலரும் ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன் கில் என பலரை கூறி வருகின்றனர்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரியிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரம் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, “கேள்விக்கே இடமில்லை. அது சுப்மன் கில்தான். அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருப்பார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை நாம் பார்த்தோம். அவருக்கு வயது வெறும் 25 தான். இந்த அனுபவத்தில் அவர் இன்னும் மெருகேறுவார். அவருடைய பேட்டிங்கில் ஒரு கம்பீரம் இருக்கிறது. நீண்ட இன்னிங்ஸ் விளையாடும் திறன் அவருக்கு உள்ளது” என்று கூறினார்.






