ஜெய்ஸ்வால், ஜூரேல் அரைசதம்...ராஜஸ்தான் அணி 210 ரன்கள் குவிப்பு

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
ஜெய்ஸ்வால், ஜூரேல் அரைசதம்...ராஜஸ்தான் அணி 210 ரன்கள் குவிப்பு
Published on

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா வில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ராஜஸ்தான் அணியில் தொடக்கம் முதல் ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 55 ரன்களும் , வைபவ் சூர்யவன்ஷி 35 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் துருவ் ஜூரேல் அபாரமாக விளையாடினார். அவர் அரைசதமடித்து அசத்தினார். துருவ் ஜூரேல் 75 ரன்கள் எடுத்தார்.இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com