சென்னை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் போஸ்டர் நியமனம்

வ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சென்னை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் போஸ்டர் நியமனம்
Published on

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் போஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சென்னைய அணியில் இணைந்துள்ளார்.

45 வயதான போஸ்டர் இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 11 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டி களில் விளையாடி உள்ளார். சென்னை அணி யில் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி, பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமோன்ஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com