

ஜெய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூ ரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை வீழ்த்தியதால் அவரின் முகத்திற்கு நேராக சென்று ஜேமிசன் மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வளர்ந்து வரும் ஓர் இளம் வீரரிடம் இவ்வாறு ஆக்ரோஷமாக நடந்துகொள்வதா என ரசிகர்கள் ஜேமிசனைக் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சூர்யவன்ஷியின் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடிய ஜேமிசனுக்கு ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை விடுத்துள்ளது. ஜேமிசனின் இந்த செயல், இது ஐபிஎல் நன்னடத்தை விதி 2.5-ஐ மீறிய செயலாகும். இந்த விவகாரத்தில் அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இனி இதுபோன்று ஆக்ரோஷமாக செயல்படக் கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.