இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் ; மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு

இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் ; மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
Published on

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். இந்திய அணி துவக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. பிரித்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நட்சத்திர வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஓரளவு தாக்குப் பிடித்த துவக்க வீரர் மயங்க் அகர்வாலும் 34 ரன்களில் பவுல்ட் பந்தில் வெளியேறினார்.

இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது களத்தில் ரகானே 38 ரன்களுடனும் ரிஷாப் பாண்ட் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை விட்ட போதும் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், தொடர்ந்து போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com