ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு

ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு.
ஐதராபாத் அணியில் மார்சுக்கு பதிலாக ஜாசன் ராய் சேர்ப்பு
Published on

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணத்தால் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், ஐதராபாத் அணி நிர்வாகத்திடமும் சில தினங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் தன்னால் நீண்ட நாட்கள் இருக்க இயலாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மிட்செல் மார்சுக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜாசன் ராயை ஐதராபாத் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் ஜாசன் ராய் விலை போகவில்லை. இப்போது அவரை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com