ஜேசன் ராய் சதம் வீண்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா...!

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கேப்டவுன்,

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் சாம் கரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி சதடித்தார். அவர் 113 ரன்னில் அவுட்டானார். டேவிட் மலான் 59 ரன் எடுத்து வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், இங்கிலாந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 27 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டும், சிசந்த மகளா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com