இங்கிலாந்து ஆஷஸ் அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம்

இங்கிலாந்து ஆஷஸ் அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ஆஷஸ் அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம்
Published on

பர்மிங்காம்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட்டில் 20 விக்கெட் கைப்பற்றி பிரமாதப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 வயதான ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்டில் அறிமுக வீரராக ஆடப்போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் விக்கெட் தடுப்பாளராக இறங்கி 92 ரன்கள் விளாசி அணியை காப்பாற்றிய சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கிய விவகாரத்தில் துணை கேப்டன் பதவியை பறிகொடுத்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை போட்டியில் ஹீரோவாக ஜொலித்ததால், தற்போது அவர் மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி வருமாறு:-

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஜோ டென்லி, ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com