தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: 5 அதிரடி வீரர்களை ஒப்பந்தம் செய்த சென்னை அணி நிர்வாகம்

ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது.

இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் அணி முதல் கட்டமாக 5 முக்கிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸிஎன 5 வீரர்களை ஜோகனஸ்பர்க் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடி வருகின்றனர். அதே நேரத்தில் டுபிளசிஸ் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தூணாக விளங்கியவர். இதனால் இந்த வெற்றி கூட்டணி தென் ஆப்பிரிக்கா லீக்கிலும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com