

லண்டன்,
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து-பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜொனாதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். 39 வயதாகும் ஜொனாதன் டிராட் இங்கிலாந்து அணிக்காக 68 ஒருநாள் போட்டிகள் மற்றும் எழு டி20 போட்டிகளில் விளையாடி 18,662 ரன்களும், 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,835 ரன்களும் குவித்துள்ளார். 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நம்பிக்கையுடன் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது.