அரைசதங்களில் செஞ்சுரி... டி20-ல் அரிய சாதனை படைத்த பட்லர்

குஜராத் அணி அடுத்து 17-ம் தேதி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
அரைசதங்களில் செஞ்சுரி... டி20-ல் அரிய சாதனை படைத்த பட்லர்
Published on

சென்னை,

குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 37 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் என்ற அரிய சாதனையையும் அவர் எட்டியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து போட்டிக்குப் பிறகு பேசிய அவர், மீண்டும் பார்முக்கு திரும்பியது பெரிய நிம்மதியாக உள்ளது என்றார். கடந்த சில மாதங்களாக தனது பேட்டிங் பார்ம் கவலை அளித்ததாக கூறிய பட்லர், சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

Also Read
“500 ரன்கள் எடுத்தாதான் ஜெயிக்க முடியும்” - ஐதராபாத் பந்துவீச்சை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்
அரைசதங்களில் செஞ்சுரி... டி20-ல் அரிய சாதனை படைத்த பட்லர்

இதே ஆட்டத்தை அடுத்த போட்டிகளிலும் தொடருவேன் எனவும் பட்லர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நேரத்தில் பட்லர் பார்முக்கு திரும்பியிருப்பது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் ஆட்டங்களில் அவரின் அதிரடி ஆட்டம் அணிக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணி அடுத்து 17-ம் தேதி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com